மேலும் செய்திகள்
13 புது பேட்டரி வாகனம் ஏர்போர்ட்டில் இயக்கம்
09-Nov-2024
திருவள்ளூர்,:திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குப்பை அகற்ற, 38 பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.திருவள்ளூர் ஒன்றியத்தில் மொத்தம், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக துப்புரவு ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். சேகரமாகும் குப்பையை ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளுக்கும் குப்பையை சேகரிக்க மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக திருவள்ளூர் ஒன்றியத்திற்கு, நடப்பு 2024 - 25ம் ஆண்டிற்கு, 38 பேட்டரி வாகனங்கள் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.இந்த வாகனங்கள் தலா ஒரு ஊராட்சிக்கு ஒன்று வீதம், விரைவில் வழங்கப்பட உள்ளது.
09-Nov-2024