ஐஸ்கிரீம் சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெங்கடாபுரம் கிராம தெருக்களில் நேற்று வாகனத்தில் வைத்து ஒரு நபர், ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள சிறுவர்களும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த ஐஸ்கிரீமில், பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென நான்கு சிறுவர்கள் மயக்கம் வருவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். நான்கு சிறுவர்களுக்கும் அத்திமாஞ்சேரிபேட்டை துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.