உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் - கார் மோதல் 4 பேர் உயிர் தப்பினர்

அரசு பஸ் - கார் மோதல் 4 பேர் உயிர் தப்பினர்

திருத்தணி:சென்னை நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 46; கோவில் பூசாரி. இவர், நேற்று தன் அக்கா, தம்பி மற்றும் மனைவியுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டார். காரை பிரகாஷ் ஓட்டினார்.சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.இதனால், பின்னால் வந்த பிரகாஷின் கார் பேருந்து மீது மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை