உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சின்னம்மாபேட்டையில் 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

சின்னம்மாபேட்டையில் 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகர் பகுதியில் ஓடைக்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு 80 ஆண்டுகள் பழமையான, 40க்கும் மேற்பட்ட பனைமரங்களை சிலர் பொக்லைன், இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி அகற்றியுள்ளனர்.இதுகுறித்து சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நான்கு தலைமுறையாக விவசாயம் செய்ய, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் காக்க இந்த மரங்கள் உதவியாக இருந்தன.அரசு பனை மரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சாலையில் இருந்த 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி வீழ்த்தியது வருத்தத்தை அளிக்கிறது. செங்கல் சூளைகளுக்கு அனுப்ப, வியாபார நோக்கத்திற்காக ஏரி, குட்டை, ஓடைப் பகுதிகளில் இருந்த பனை மரங்கள் வெட்டப்படுவது திருவாலங்காடு சுற்று வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து திருத்தணி வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பனை மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி