மேலும் செய்திகள்
பட்டாசு கடைக்கு விண்ணப்பம்
11-Oct-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, 58 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படும். நடப்பாண்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க இணையத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில், மாவட்டம் முழுதும் 58 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்காலிக பட்டாசு கடைகளை வருவாய், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த ஆய்வு முடிந்து, வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்ததும் அனுமதி வழங்கப்படும்' என்றனர்.
11-Oct-2025