உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தொழில்நுட்ப பணி தேர்வு 4 மையத்தில் 596 பேர் பங்கேற்பு

 தொழில்நுட்ப பணி தேர்வு 4 மையத்தில் 596 பேர் பங்கேற்பு

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில், 596 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான கணினி வழி தேர்வு, நாளை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள நான்கு தேர்வு மையங்களில், 596 பேர் தேர்வு எழுத உள்ளனர். ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும், போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் மையங்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம் கோட்டம் சார்பில், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 9:30 - 12:30 மணி வரை முற்பகல் தேர்வும், மதியம் 2:30 - மாலை 5:30 மணி வரை பிற்பகல் தேர்வும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை