உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பு 6 வாகனங்கள் சிறைபிடிப்பு

ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பு 6 வாகனங்கள் சிறைபிடிப்பு

திருத்தணி : சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் முதல் திருத்தணி அடுத்த பொன்பாடி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு கலெக்டர் அனுமதியுடன், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரியில் மண் எடுக்கப்படுகிறது.ஏரியில், ஒரு மீட்டர் உயரத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என, கலெக்டர் ஆணையில் உள்ளது. ஆனால், அளவுக்கு அதிமாக மண், 'பொக்லைன்' வாயிலாக அள்ளப்பட்டு வந்தது. இதற்கு, பட்டாபிராமபுரம் ஊராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி வழங்கிய உயரத்திற்கு தான் மண் எடுக்க வேண்டும் என எச்சரித்தனர். ஆனால், ஏரியில் அதிக ஆழம் தோண்டி மண் எடுத்ததால், 15 நாட்களுக்கு முன், 30க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள் லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், திருத்தணி வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். அதன்பின், மண் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.நேற்று மூன்று பொக்லைன் இயந்திரங்களுடன்,10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள், ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும்பட்டாபிராமபுரம் பகுதிவாசிகள் மற்றும் இளைஞர்கள் என, 50க்கும் மேற்பட்டோர், ஏரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த 'பொக்லைன்' இயந்திரம் மற்றும் நான்கு லாரிகளை சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி தாசில்தார் மலர்விழி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம், நில அளவை அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுநடத்தினர்.மேலும், ஏரியில் மண் அள்ளிய இடத்தில் அளந்து பார்த்தபோது, மூன்று மீட்டர் உயரத்திற்கு மேல் மண் எடுத்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து, ஆறு வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஏரியில் மண் எடுப்பதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை