உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டில் இருந்த 60 சவரன் நகை மாயம்

வீட்டில் இருந்த 60 சவரன் நகை மாயம்

குன்றத்துார், படப்பை அருகே, கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 24. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பொறியாளராக பணியாற்றி வந்தார்.இவரது தந்தை மோகன் தனியார் செக்யூரிட்டியாகவும், தாய் ஆதிலட்சுமி கரசங்கால் ஊராட்சி மக்கள் நலப் பணியாளராகவும் பணியாற்றி வந்தனர்.செல்வகுமாரின் மனைவி தமிழரசிக்கு, டிச., 21ல் பெண் குழந்தை பிறந்ததையடுத்து, திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாய் வீட்டில் உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த பிரோ திறந்திருந்த நிலையில், அதில் வைத்திருந்த, 60 சவரன் நகை காணாமல் போனதை செல்வகுமார் கண்டார்.மணிமங்கலம் போலீசில் செல்வகுமார் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ