உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 75 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்

75 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்து, 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. திருத்தணி நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் கடைகளில் அதிகளவில் விற்பதாக கலெக்டருக்கு புகார் வந்தது. திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான ஊழியர்கள் நேற்று, திருத்தணி - அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 75 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலா 2,000 வீதம் ஐந்து கடைகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை