உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

பொன்னேரி:காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், தமிழகம் முழுதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. அதே சமயம் கள்ளச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது.மது விற்பனையை தடுக்கும் வகையில், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவரின்படி, பெண் போலீசாருடன் அங்கு சென்றனர்.சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த தென்றல் சாந்தி, 32, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதானையில், சாணார்பாளையம் கிராமத்தில் மதுவிற்பனையில் ஈடுபட்ட சந்திரன், 50, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 30 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு, 12,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி