வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இல்லம் தேடி சரக்கு திட்டம் ஆரம்பிக்கலாம். வெற்றிக்கு நான் கேரண்டி.
திருவாலங்காடு: இல்லம் தேடி கல்வி திட்டத்தில், கடந்த 2021 - --22ம் ஆண்டு மாவட்டத்தில்
8,722 மையங்கள் இயங்கி வந்தன. தற்போது, 728 மையங்கள் மட்டுமே இயங்குகிறது.
இதனால், ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் பின் தங்கும் நிலை ஏற்படும் அபாயம்
உள்ளது. மேலும், கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் 57 திட்டங்கள்
பெயரளவில் மட்டுமே உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கொரோனா
தொற்று காலத்தில் ஏற்பட்ட கல்வி இடைவெளி மற்றும் மாணவர்களின் கற்றல்
குறைவை தவிர்க்கும் நோக்கத்தில், தமிழக அரசு 2021ம் ஆண்டு 'இல்லம் தேடி
கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், தினமும் மாலை 5:00 - 7:00 மணி வரை மாணவர்களுக்கு கல்வி பயிற்சி வழங்குகின்றனர். ரூ.100 கோடி
இது, மாணவர்களின் அடிப்படை கல்வித் திறன்கள் மேம்படுவதற்கும், இடைநிற்றலை குறைக்கும் வகையிலும் செயல்படுகிறது.திருவள்ளூர்
மாவட்டத்தில், இத்திட்டம் துவங்கியது முதல் திருவாலங்காடு, கடம்பத்துார்,
புழல், பூண்டி, சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உட்பட 14
ஒன்றியங்களில், 8,722 மையங்கள் உருவாக்கப்பட்டன.தமிழகம் முழுதும்
இந்த முயற்சி தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, 2024 - --25ம் ஆண்டு
பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதைஅடுத்து, 2023 ஜூலையில்,
'இல்லம் தேடி கல்வி - 2.0' என்ற மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்பட
துவங்கியது.தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த மையங்களின் எண்ணிக்கை 8,722ல் இருந்து, 728 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது 10 சதவீத மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அபாயம்
திருவள்ளூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தணிகாசலம் கூறியதாவது:அரசு கல்வித்துறை வாயிலாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், கலைத்திருவிழா, கோடைக் கொண்டாட்டம், சிறார் திரைப்பட விழா, நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், மணற்கேணி, தமிழ்க்கூடல், சிற்பி திட்டம் உட்பட, 57 திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.ஆனால், இதற்காக தனியாக ஆசிரியர், ஊழியர்களை பணியமர்த்தி திட்டங்களை ஊக்குவிப்பது இல்லை.தன்னார்வலர்கள், தற்காலிக ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதனால், பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே உள்ளன.கடந்த காலங்களில் இல்லம் தேடி கல்விக்கு ஆசிரியர்கள் தலைமையில், ஒன்றியத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் இருந்தனர். தற்போது, தன்னார்வலர்கள் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மற்ற திட்டங்களும் இவ்வாறே கையாளப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், இல்லம் தேடி கல்வி மூடுவிழா காணும் நிலையில் உள்ளதை போல, மற்ற திட்டங்களும் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா காலத்தில் இருந்த கல்வி இடைவெளியை குறைக்கும் திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டம் வாயிலாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் கற்றல் நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. நகர்ப்புற மாணவர்களை விட, பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 14,000 மாணவர்கள் இல்லம் தேடி கல்வி - 2.0 திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர்.- இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்,திருவள்ளூர்.
அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அரசு பள்ளி ஆசிரியர்கள் செயல்படுத்தி வருகின்றனர்; இது, நல்ல பலனை தருகிறது. ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் தொய்வு ஏற்படுகிறது. ஆனால், கட்டமைப்பு தான் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. கல்வி மேலாண்மைக்குழு கூட்டங்களில் பெரும்பாலான பெற்றோர், இக்கருத்தை முன்வைக்கின்றனர். கழிப்பறை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி போன்றவற்றை மட்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றினால் போதும். நிச்சயம் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பதும் அவசியம்.- அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்,திருவள்ளூர்.
ஒன்றியம் 2021 - --22 2024 - -25திருவள்ளூர் 325 32கடம்பத்தூர் 510 49பூண்டி 833 129திருவாலங்காடு 332 50ஆர்.கே.பேட்டை 318 33திருத்தணி 341 33பள்ளிப்பட்டு 344 54பூந்தமல்லி 810 56வில்லிவாக்கம் 715 32புழல் 654 38சோழவரம் 920 49மீஞ்சூர் 940 50கும்மிடிப்பூண்டி 985 94எல்லாபுரம் 745 29மொத்தம் 8,772 728
இல்லம் தேடி சரக்கு திட்டம் ஆரம்பிக்கலாம். வெற்றிக்கு நான் கேரண்டி.