மேலும் செய்திகள்
கோலமாவு வியாபாரி சாலை விபத்தில் பலி
02-Feb-2025
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், நேற்று, அதிகாலை 2:00 மணியளவில், ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கிய சாலையில், ஆண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சாலையில் அவரது உடல் இருப்பது தெரியாமல், அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதில், அவரது உடல் முற்றிலும் சிதைந்து போனது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
02-Feb-2025