உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குப்பை கொட்டும் இடமான குடிநீர் தொட்டி

 குப்பை கொட்டும் இடமான குடிநீர் தொட்டி

உளுந்தை: மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பில்லாததால், அதை சுற்றிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், 20 ஆண்டுகளுக்கு முன் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் தொட்டியை சுற்றி குப்பை கொட்டப்பட்டு வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை பராமரித்து, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ