மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
14 minutes ago
பொன்னேரி:தொடர் மழையின் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் இரு கரைகளை தொட்டு ஓடுவதுடன், ஆண்டார்மடம் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பொன்னேரி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆரணி ஆற்றிற்கு மழைநீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சுமிபுரம் அணைக்கட்டு, ரெட்டிப்பாளையம் மற்றும் ஆண்டார்மடம் தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர், பழவேற்காடு கடலுக்கு ஆர்பரித்து செல்கிறது. கரையோர கிராமங்கள் தீவிர மாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் ஆற்றின் இரு கரைகளை தொட்டு, ஓடும் நிலையில், பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், காட்டூர் - பழவேற்காடு சாலையில் இருந்து தரைப்பாலம் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, கடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள், பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு, 13 கி.மீ., சுற்றி பயணிக்கும் நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
14 minutes ago