உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குப்பை அள்ளும் வாகனம் இல்லாததால் அரிசந்திராபுரத்தில் அடிக்குது துர்நாற்றம்

 குப்பை அள்ளும் வாகனம் இல்லாததால் அரிசந்திராபுரத்தில் அடிக்குது துர்நாற்றம்

திருவாலங்காடு: அரிசந்திராபுரம் ஊராட்சியில் குப்பை அள்ள வாகனம் இல்லாததால், குப்பை தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த, குப்பையை தரம் பிரித்து கையாளும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை. இதனால் சின்னம்மாபேட்டை செல்லும் சாலை, அரக்கோணம் சாலை என கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பை குவிந்து உள்ளது. இதனால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: ஊராட்சிக்கு ஐந்து ஆண்டுகளாக குப்பை வண்டிகள் வழங்கப்படவில்லை. அருகே உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் இருந்து குப்பை வண்டி கடனாக பெற்று அகற்றி வந்தோம். தற்போது அந்த வாகனமும் பழுதாகி விட்டதால், குப்பை அகற்ற முடியாமல் உள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வாகனம் வழங்கினால் மட்டுமே குப்பையை அகற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ