உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்

புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்

திருவள்ளூர்,:நகராட்சி குழந்தைகள் மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால், உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சி சார்பில், சத்தியமூர்த்தி தெருவில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி மற்றும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.இந்த கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, கட்டடத்தின் மேல்பகுதியில், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. அருகில் உள்ள குடிநீர் தொட்டியைச் சுற்றிலும், சுகாதாரமின்றி காணப்படுகிறது.இதன் காரணமாக, கட்டடத்தின் உறுதி தன்மை பாதிப்பதுடன், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, குழந்தைகள் மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, சுகாதாரம் பேண வேண்டும் என, பெற்றோர்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை