மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத பண்ருட்டி கண்டிகை பள்ளி
05-Sep-2024
திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் ஊராட்சி, பொம்மராஜுபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளி எதிரே விளையாட்டு மைதானம், அங்கன்வாடி மையம் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. ஆனால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பள்ளி வளாகத்திலேயே ஆடு, மாடுகள் கட்டி வைக்கின்றனர்.மேலும், பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, மதுப்பிரியர்கள் பள்ளி வகுப்பறைகள் முன், அமர்ந்து மதுகுடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்வதால் ஆசிரியர்கள், மாணவர்கள் முகம்சுளிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
05-Sep-2024