மேலும் செய்திகள்
டூ - வீலர் திருட்டு
29-Oct-2024
திருவள்ளூர், திருவள்ளூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர்பலியானார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 27. வேலுார் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42. இவர்கள் இருவரும் ஸ்பெளண்டர் பிளஸ் பைக்கில் கடந்த, 14ல் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்றனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த மகேந்திரா ஜீப், பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சரத்குமார், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார். திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Oct-2024