உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் பெண் பலி

சாலை விபத்தில் பெண் பலி

திருத்தணி:ஆந்திர மாநிலம் ஞானம்மாகண்டிகை பகுதி சேர்ந்தவர் சண்முகம் மனைவி குருவம்மாள், 50. இவர் நேற்று காலை தன் சகோதரர் வெங்கடேசன்,45 என்பவருடன் ஹேண்டா சைன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணிக்கு வந்துக் கொண்டிருந்தார். திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கொள்ளாபுரி அம்மன் கோவில் அருகே வந்த போது, வெங்கடேசன் திடீரென பிரேக் போட்டார். அப்போது குருவம்மாள் தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, வெங்கடேசன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குருவம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை