உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி வேப்பம்பட்டு வாலிபர் பலி

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி வேப்பம்பட்டு வாலிபர் பலி

வேப்பம்பட்டு:வேப்பம்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 30. சிலிண்டர் டெலிவரி பணி செய்து வருகிறார்.நேற்று மதியம் 12:30 மணியளவில் தொட்டிக்கலையில் இருந்து அயத்துார் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வந்தனர். நேற்று மாலை 5:00 மணியளவில் திருநின்வூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செவ்வாப்பேட்டை போலீசார் சென்று ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை