உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்பாடி சோதனை சாவடியில் விபத்து: 2 காவலர்கள் படுகாயம்

பொன்பாடி சோதனை சாவடியில் விபத்து: 2 காவலர்கள் படுகாயம்

திருத்தணி,:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், நேற்று தலைமை காவலர் லட்சுமணன், 47, காவலர் விக்னேஷ், 28, பணியில் இருந்தனர். இவர்கள், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்கு வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு சாலையின் இருபுறமும் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம், சென்னை கோயம்பேடில் மாங்காய் மூட்டைகளை இறக்கிவிட்டு, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட 'பொலிரோ' கார், திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.காரை தாசித், 30, என்பவர் ஓட்டினார். பொன்பாடி சோதனைச்சாவடி பேரிகார்டு அருகில் நிறுத்தியிருந்த மற்றொரு கார் மீது, தாசித் ஓட்டி வந்த கார் மோதியது. இதில், பேரிகார்டு மீது கார் மோதியதில், பேரிகார்டு மேற்கண்ட போலீசார் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த போலீசாரை, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில், விக்னேஷ் இடுப்பு எலும்பு முறிவு, தலை, கை போன்ற இடங்களிலும் காயமடைந்தார். லட்சுமணன், லேசான காயத்துடன் முதலுதவி பெற்று வீட்டிற்கு திரும்பினார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ