விளம்பர தட்டியால் விபத்து அபாயம்
ஆவடி:சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராம் முதல் சேக்காடு வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு, மின் கம்பங்களில் தனியார் நிறுவனம் விளம்பர தட்டிகள் கட்டியுள்ளது.சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் பகுதி என்பதால், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.இந்த விளம்பர தட்டிகளால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், காற்று வேகமாக வீசும்போது, அவை அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் சூழல் ஏற்படுகிறது.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியாகும்போது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி ஊழியர்கள், அதன்பின் கண்டுகொள்வதில்லை.இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று மின் கம்பங்களில் மீண்டும் விளம்பர தட்டி கட்டி உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.