உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆச்சி மசாலா தொழிற்சாலை ரூ.150 கோடியில் துவக்கம்

ஆச்சி மசாலா தொழிற்சாலை ரூ.150 கோடியில் துவக்கம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பண்பாக்கம் கிராமத்தில், ஆச்சி மசாலா நிறுவனத்தின், உடனடி உணவு தயாரிப்பு தொழிற்சாலை, 150 கோடி ரூபாய் மதிப்பில், 1.10 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நேற்று, இதன் துவக்க விழா நடந்தது.ஆச்சி மசாலா குழும தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் பேசியதாவது:ஆச்சி மசாலா நிறுவனம் துவங்கி, 25 ஆண்டுகளில், 22 மாநிலங்களில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இங்கிருந்து, 220 வகையான உணவு பொருட்கள் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 15 லட்சம் கடைகள் வழியாக, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. இந்த புதிய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில், ஊறுகாய் முதற்கொண்டு, 'ரெடி டூ ஈட்' உணவு வகைகள் தயாராகின்றன. இதன் வாயிலாக, இக்கிராமத்தில், 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், ஆச்சி குழும நிர்வாக இயக்குனர்கள், அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆப்ரகாம், தெல்மா ஐசக் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை