உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த விளம்பர பேனர்

நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த விளம்பர பேனர்

திருமழிசை,திருமழிசையில் நேற்று மாலை 50 அடி உயர புரட்சி பாரதம் கட்சி பேனர், நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமழிசை பேரூராட்சியில், ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே, 50 அடி உயர புரட்சி பாரத கட்சியினர் கூட்டம் குறித்த விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு திடீரென வீசிய பலத்த காற்றில், 50 அடி உயர விளம்பர பேனர் சரிந்து, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, தகவலறிந்த திருமழிசை பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த விளம்பர பேனரை அகற்றினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ