மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் துார்வார ரூ.3.42 கோடி ஒதுக்கீடு
15-Sep-2024
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருமழிசை துணைக்கோள் நகர கோட்டத்திற்கு உட்பட்ட செவ்வாப்பேட்டை, காக்களூர், பெருமாள்பட்டு, பெரியகுப்பம், திரூர் ஆகிய திட்ட பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு பெற்றோர் வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்ட காலமாக பலர் நிலுவை தொகை செலுத்த முன்வரவில்லை.எனவே, ஒதுக்கீடுதாரர்கள் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் திருமழிசை துணைக்கோள் நகர கோட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, கணக்கை நேர் செய்து நிலுவைத் தொகை செலுத்த வேண்டும்.
15-Sep-2024