மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
18-Apr-2025
திருத்தணி:திருத்தணி நகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி - அரக்கோணம் சாலை, வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, வாகனத்தில் 30 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி எம்.ஜி.ஆர்., நரைச் சேர்ந்த ரங்கன், 45, என்பவரை கைது செய்தனர்.
18-Apr-2025