உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விலை உயர்ந்த வாட்ச் ரூ.10,000 ஆட்டை

விலை உயர்ந்த வாட்ச் ரூ.10,000 ஆட்டை

திருவாலங்காடு;மணவூர் அருகே தனியார் தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் விலையுயர்ந்த வாட்ச் மற்றும் 10,000 ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே உள்ள மருதவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 45. சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். வீட்டை திறந்து பார்த்தபோது, அறையில் இருந்த பழமையான விலையுயர்ந்த வாட்சுகள் மற்றும் 10,000 ரூபாய், இரண்டு இன்வெர்ட்டர் பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி