மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
16-Jun-2025
திருவொற்றியூர்:விநாயகர் கோவிலில், மீண்டும் உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவொற்றியூர், ராஜாஜி நகரில் சர்வ சக்தி வினை தீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.கோவில் பராமரிப்பாளர் தேவி, வழக்கம்போல நேற்று காலை கோவில் நடை திறந்தார்.அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட கடப்பாரையை, மர்ம நபர்கள் அங்கு விட்டுச் சென்றுள்ளனர்.இதே கோவிலில், கடந்தாண்டும் உண்டியல் உடைத்து, காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து, சாத்தான்காடு போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
16-Jun-2025