உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர்:வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியில் தண்டவாளத்தில், ஜூன் 19ம் தேதி வெட்டுக்காயங்களுடன் ஆண் உடல் கிடந்தது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், புட்லுார் பகுதியைச் சேர்ந்த மேத்யூ, 30, என்பது தெரிந்தது. மேத்யூவின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையில், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், மேத்யூவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த உஷா, 29, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கூலிப்படையை வைத்து மேத்யூவை உஷா கொலை செய்ததும், ரயில் மோதி இறந்ததாக விசாரணையை திசை திருப்ப, உடலை தண்டவாளத்தில் வீசியதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், உஷா உட்பட மூவரை சமீபத்தில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த புட்லுாரை சேர்ந்த பால்ராஜ், 47 என்பவரை நேற்று கைது செய்தனர். பால்ராஜ் மற்றும் மேத்யூ இருவருக்கும் உஷாவிடம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பிரச்னை காரணமாக கொலை நடந்ததாக, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ