குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
கும்மிடிப்பூண்டி:ரயில் பயணியர் மத்தியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ஷேர் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். ரயில் நிலைய மேலாளர் வினோத், ஷேர் அறக்கட்டளை நிர்வாகிகள் மேரி அக்சீலியா, மேரி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்வின் போது, குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2016ன்படி அனைத்து தொழில்களிலும் குழந்தைகளை பணியமர்த்துவது சட்ட விரோதமானது. மேலும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில் பயணியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.