மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி சேர்க்கை விரைவில் அறிவிப்பு
06-May-2025
திருவள்ளூர்:அரசு கலைக் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லுாரி மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் வாயிலாக, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பேருந்து வசதி உள்ளன.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு 2025 - -26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், www.tngasa.inஎன்ற இணையதளம் வாயிலாக, வரும் 27ம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவுக் கட்டணம் 2 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, கல்லுாரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தின், 044 - 2434 3106, 2434 2911 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-May-2025