உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, பரணம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, மது விற்றுக் கொண்டிருந்த, சுகுமாரன், 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 27 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை