உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது

மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜம்புராமலிங்கம், 68. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாககுமார், 68 என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஜம்புராமலிங்கம் வயல்வெளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, நாககுமார் மற்றும் அவரது உறவினர்கள் சிவலிங்கம், 45, அவரது மகன் பகவதி, 21 ஆகிய மூவரும் திடீரென வழிமறித்து மண்வெட்டியால் ஜம்புலிங்கத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜம்புராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை