உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி அரசு கல்லுாரியில் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம்

திருத்தணி அரசு கல்லுாரியில் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம்

திருத்தணி:திருத்தணி அரசு கலை கல்லுாரியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கு, திருத்தணி எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், மொத்தம் 3,200 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இக்கல்லுாரியில் கலையரங்கம் இல்லாததால் விழாக்கள் மற்றும் ஆண்டு விழாவின் போது, மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, கல்லுாரி பொறுப்பு முதல்வர் தேவசேனா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்றார். அப்போது, கல்லுாரி சார்பில் எம்.எல்.ஏ., சந்திரனிடம், கூடுதல் வகுப்பறை மற்றும் கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என, மனு அளிக்கப்பட்டது.உடனே, எம்.எல்.ஏ., “முதலில் கலையரங்கம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பின், கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான நிதி பெற்று தரப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !