சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்
ஊத்துக்கோட்டை: ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் அன்னை தெரசா நகரில் வசித்து வருபவர் ஈசாக், 28. இவர் மீது, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஈசாக் அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது, ஹோட்டல் உரிமையாளர் கரீமுல்லாகாதர் பணம் கேட்டார். 'என்னிடமே பணம் கேட்கிறாயா?' என, அவரை தாக்கினார். இதில் காயமடைந்த கரீமுல்லாகாதர், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்த போலீசார், ஈசாக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.