உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடம் புரண்ட சரக்கு ரயில் பெரும் விபத்து தவிர்ப்பு

தடம் புரண்ட சரக்கு ரயில் பெரும் விபத்து தவிர்ப்பு

தண்டையார்பேட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக, நேற்று முன்தினம் இரவு, 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், சரக்கு ஏற்றிக் கொண்டு சென்னை வந்தது.தண்டையார்பேட்டை யார்டு அருகே வந்த போது, 11வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டன. சத்தம் கேட்டு உடனே, இன்ஜின் டிரைவர் ரயிலை அங்கேயே நிறுத்தி, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.பின், மூன்று மணி நேரம் போராடி, தண்டவாளத்தில் இருந்து இறங்கிய சரக்கு பெட்டியை சரிசெய்தனர். ரயில் தடம்புரண்ட நேரத்தில் எந்த ரயிலும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை