ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அண்ணாதுரை சிலை அருகே, போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.டி.எஸ்.பி., சாந்தி தலைமயைில் நடந்த இந்த நிகழ்வில், போலீசார் கலந்து கொண்டனர். இதில், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து டி.எஸ்.பி., சாந்தி எடுத்துரைத்தார்.இதுகுறித்து அவர் பேசுகையில், 'ஹெல்மெட் அணிவதால் அபராதம் தவிர்க்கப்படுவதுடன், விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். இனி ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.