உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கொட்டும் குப்பை கோலம் போட்டு விழிப்புணர்வு

சாலையில் கொட்டும் குப்பை கோலம் போட்டு விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள, 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.தினமும் 1 டன் அளவிற்கு குப்பை சேகரமாகிறது. தனியார் நிறுவனம் வாயிலாக, 30 பேர் தள்ளுவண்டியில் மட்கும், மட்காத குப்பை என தரம்பிரித்து சேகரிக்கின்றனர். மேலும், துாய்மை பணியாளர்கள் வாயிலாகவும் குப்பை சேகரிக்கப்படுகிறது.பொதுமக்கள் குப்பையை சாலையில் கொட்டாமல், குப்பை சேகரிக்க வருவோரிடம் வழங்க வேண்டும் என, பலமுறை கூறியும், சிலர் தெருக்களில் குப்பையை கொட்டுகின்றனர். இந்த குப்பை காற்றில் பறந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.இதை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து, அங்கு கோலம் போட்டு வருகின்றனர். இந்த புதிய முயற்சி பலன் அளிக்குமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ