மேம்பால சுவரில் விழிப்புணர்வு
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள மேம்பால சுவரில், அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவதை தவிர்க்க, நெடுஞ்சாலை துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐ.சி.எம்.ஆரில் இருந்து திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு துவக்கப்பட்டு, பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இச்சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலைக்காக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இருவழி பாதையாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர் மற்றும் துாண்களில், அரசியல் கட்சியினர் விளம்பரம் எழுதுவதை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், பல்வேறு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியுள்ளனர்.