உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்

ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்

பொன்னேரி:வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆரணி ஆற்றின் கரைகளை, 8.50 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.பொன்னேரி லட்சுமிபுரம் பகுதியில் இருந்து, ஆண்டார்மடம் வரை ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வளத்துறை சார்பில், ஆற்றின் கரைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு, 8.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.நேற்று அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். ஆற்று கரை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்து பார்வையிடுவதற்காக, அமைச்சர் நாசர் ஆற்றுப்படுகையில் சிறிது துாரம் நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த பள்ளத்தை தாண்டும்போது கால் இடறி விழப்போனார். பின்னால் வந்த கலெக்டர் அவரை பிடித்து, பாதுகாத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ