உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குமாரராஜ பேட்டையில் ஆக்கிரமித்துள்ள பேனர்கள்

குமாரராஜ பேட்டையில் ஆக்கிரமித்துள்ள பேனர்கள்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே. பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குமாரராஜ பேட்டை கிராமம். இந்த நெடுஞ்சாலையில் குமாரராஜப்பேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம சேவை மைய கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலையை ஒட்டி விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றை யொன்று கடக்கும்போது போதிய இடைவெளியின்றி விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. தற்போது வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம சேவை மைய கட்டடம் உள்ளிட்டவற்றை மறைக்கும் விதமாக தொடர்ச்சியாக 100 அடி துாரத்திற்கு சாலையை ஒட்டி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பர பேனர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை