கூடைப்பந்து 42 அணிகள் மோதல்
சென்னை, ஐ.சி.எப்., காலனி கூடைப்பந்து கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை, ஐ.சி.எப்., மைதானத்தில், நேற்று துவங்கியது.இதில், மாவட்ட அளவிலான பள்ளிகள் மற்றும் அகாடமிகளை சேர்ந்த, 42 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியில், 10, 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட இருபாலருக்கும், தனித் தனியாக நடக்கின்றன.நேற்று காலை நடந்த, 16 வயதினருக்கான ஆட்டத்தில், ஐ.சி.எப்., காலனி கிளப், 33 - 10 என்ற கணக்கில், கவரைப்பேட்டை ஆர்.எம்.கே., பள்ளியை தோற்கடித்தது.அதேபோல், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சூரப்பேட் வேலம்மாள் பள்ளி, 30 - 22 என்ற கணக்கில் செயின்ட் ராபல் அணியை தோற்கடித்தது. போட்டிகள், இன்றுடன் நிறைவடைகின்றன.