உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, சைக்கிள் போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.போட்டியினை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் முன்னிலை வகித்தனர்.போட்டியில், ஆண், பெண் என, இருபாலருக்கும் தனித்தனியாக 17 மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., துாரம் போட்டி நடத்தப்பட்டது. மேலும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் 17, 15 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கு 15 கி.மீ., துாரம் போட்டி நடந்தது.போட்டியில், முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, முறையே 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய்; 4 - 10ம் இடம் பெற்றவர்களுக்கு தலா, 250 ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், தடகள பயிற்றுநர் லாவண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை