மேலும் செய்திகள்
பிடே ஓபன் ரேட்டிங் செஸ் போட்டி துவக்கம்
07-Dec-2024
சென்னை, இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவில், மவுண்ட் செஸ் அகாடமி, சீயோன் ஆல்வின் பள்ளி சார்பில், சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின.மெப்பேட்டில் உள்ள சியோன் ஆல்வின் பள்ளி வளாகத்தில் துவங்கிய போட்டி, நாளை வரை நடக்கிறது. இவற்றில், 8, 10, 12, 14 மற்றும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவு, 'வெட்ரன்ஸ்' உள்ளிட்ட பல்வேறு பிரிவில், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, மொத்தம் 3 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், நான்கு நாட்களில் எட்டு சுற்றுகள் நடக்கின்றன.
07-Dec-2024