உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52. இவர் திருத்தணி பூ மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு தன் இரு சக்கர வாகனத்தில் பூ கடைக்கு வந்தார். பின் வாகனத்தை நிறுத்திவிட்டு வியாபாரம் செய்தார், மதியம் வீட்டிற்கு செல்வதற்காக வாகனம் நிறுத்திய இடத்திற்கு சென்ற போது வாகனத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகார்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை