பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: தி.மு.க., அரசை கண்டித்து , பா.ஜ.,வினர் கண்டன ஆ ர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில், திருவள்ளூர் மருத்துவ கல்லுாரி அருகில், நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. பா.ஜ., தொண்டர்களுடன், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனையை, தி.மு.க., அரசு கட்டுபடுத்த தவறி விட்டதாக கூறி, கண்டன கோஷமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.