உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விஸ்வாமித்திரன், 10. அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், நண்பர்களுடன் விளையாட சென்றார். வீட்டின் அருகே உள்ள கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர், நீரில் மூழ்கினார்.தகவல் அறிந்து சென்ற அக்கம்பக்கத்தினர், ஆபத்தான நிலையில் சிறுவனை மீட்டனர். பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை