மேலும் செய்திகள்
5 வயது சிறுவனை கடித்த தெரு நாயால் அச்சம்
28-Sep-2025
கண்ணுார், நாய் கடித்து, 5 வயது சிறுவன் படுகாயமடைந்தான். கண்ணுார் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேஷ், 37. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 5, 3 வயதில் மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, 5 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த நாய் சிறுவன் மீது பாய்ந்து கடித்தது. காயமடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
28-Sep-2025