உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்

திருமழிசை, திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டிற்கான ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6:00 - 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.https://x.com/dinamalarweb/status/1939958459186762000பிரம்மோத்சவ நாளில், தினமும் காலை - மாலை 7:00 மணிக்கு, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, வரும் 6ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா 10ம் தேதி காலையிலும் நடைபெறும்.வரும் 12ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன், ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை