புளியங்குண்டா தார்ச்சாலை சேதம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரத்தில் இருந்து காட்ராயகுண்டா கிராமம் வழியாக புளியங்குண்டாவிற்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை தற்போது, ஜல்லி பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.இதனால் கடந்த ஒரு ஆண்டாக இந்த வழியில் வேலைக்கு செல்பவர்கள், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை இச்சாலை வழியாக எடுத்துச் செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி, 2 கி.மீ., சாலையை போர்க்கால அடிப்படையில் புதிதாக அமைத்துத் தர வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.